அஜித் இல்லாமல் நடக்கும் படப்பிடிப்பு… வைரலாகும் ‘AK 61’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (09:19 IST)
நடிகர் அஜித் தற்போது ஹெச் வினோத் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

அஜித்தின் 61வது படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. ராமோஜி ராவ்  பிலிம் சிட்டியில் சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த படம் ஒரு வங்கிக் கொள்ளை சம்மந்தப்பட்ட படம் என சொல்லப்படுகிறது. இதுவரை நடந்த படப்பிடிப்பில் 75 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் தற்போது ஐரோப்பா முழுவதும் இரு சக்கரவாகனத்தில் பயணம் செய்து வரும் அஜித்தின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் ஐரோப்பா பயணத்தை அஜித் முடிந்ததும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளாராம். ஆனால் இனிமேல் எடுக்கப்போகும் காட்சிகளில் அஜித் வேறொரு வித்தியாசமான தோற்றத்தில் நடிக்க உள்ளாராம். அதற்கான தன் கெட்டப்பை அஜித் மாற்ற உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் அஹித் இல்லாத காட்சிகளை சென்னையில் படமாக்கி வருகிறார் இயக்குனர் H வினோத். இந்நிலையில் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஆகியோரோடு ரசிகர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்