கோலியை வறுத்தெடுக்கும் ட்ரோல் பதிவுகள்… ஓ இதுதான் காரணமா?

புதன், 6 ஜூலை 2022 (08:56 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கோலி சமீபகாலமாக ஃபார்ம் அவுட்டில் இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதற்கான அணி சமீபத்தில் இங்கிலாந்துக்கு புறப்பட்டு சென்றது. இதையடுத்து நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து தொடரை 2-2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

இந்த போட்டியில் இந்திய அணி வீரர் கோலி, இங்கிலாந்து பேட்ஸ்மேன் பேர்ஸ்டோ பேட்டிங் செய்யும்போது அவரை ஸ்லெட்ஜ் செய்தார். ஆனால் இரு இன்னிங்ஸ்களிலும் பேர்ஸ்டோ சதமடித்து இங்கிலாந்து வெற்றிக்கு முக்கியக் காரணியாக அமைந்தார். இதையடுத்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் உள்பட பல கிரிக்கெட் ரசிகர்களும் கோலியை ஸ்லெட்ஜிங்குக்காக ட்ரோல் செய்து பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்