மணிரத்னமும் ரஹ்மானும் நகைச்சுவை உணர்வு குறைவானவர்கள்… கமல்ஹாசன் கேலி!

vinoth

செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (10:38 IST)
நாயகன் என்ற கல்ட் கிளாசிக் படத்தைக் கொடுத்த கமல்ஹாசன் –மணிரத்னம் கூட்டணி 35 ஆண்டுகளுக்குப் பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் மீண்டும் இணைந்துள்ளது. இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், கௌதம் கார்த்திக், அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் ஜூன் மாதம் 5 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதற்கிடையில் நேற்று இந்த படத்தின் முதல் தனிப்பாடல் ரிலீஸாகி கவனம் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்நிகழ்வில் கலந்துகொண்ட கமல்ஹாசன் இயக்குனர் மணிரத்னம் மற்றும் இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் ஆகியோரை கேலி செய்யும் விதமாகப் பேசியது கவனம் ஈர்த்துள்ளது.

அதில் “மணிரத்னம் மற்றும் ஏ ஆர் ரஹ்மான் ஆகியோரிடம் என்ன பிரச்சனை என்றால் அவர்கள் வேலையைத் தவிர எதுவும் பேசமாட்டார்கள். அதனால் அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு கம்மி. நானெல்லாம் விட்டால் பேசிக்கொண்டே இருப்பேன். நகைச்சுவைக்காக கூடுதல் வார்த்தைகளை அள்ளி இரைப்பேன். ஆனால் அவர்கள் வார்த்தைகளை வெளியே விடமாட்டார்கள். அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது அதுதான். கற்றுக் கொண்டேன் என சொல்கிறேனே ஒழிய பாருங்கள் இப்போது கூட எவ்வளவு பேசிக் கொண்டிருக்கிறேன் என்று” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்