தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தனது கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் இவர் தொடர்ந்து நடித்து வந்தார். அந்த மாதிரி கதைக்களங்களில் அவர் நடித்த அருந்ததி, ருத்ரமாதேவி போன்ற படங்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் அனுஷ்கா தன்னுடைய ஐம்பதாவது படமான காட்டி படத்தில் நடித்து முடித்தார். இதில் விக்ரம் பிரபு ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருந்தார். இந்த படம் ஏப்ரல் 18 ஆம் தேதி ரிலீஸாகும் என தயாரிப்பு நிறுவமனான யுவி கிரியேஷன்ஸ் அறிவித்திருந்தது. ஆனால் அந்த நாளில் படம் ரிலீஸாகவில்லை. இதுவரை புதிய ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவில்லை. இதனால் அனுஷ்கா ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.