எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பிசாசு 2… ஆண்ட்ரியா வெளியிட்ட லேட்டஸ்ட் தகவல்!

Webdunia
வியாழன், 7 ஜூலை 2022 (09:01 IST)
பிசாசு 2 திரைப்படத்தில் ஆண்ட்ரியா மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நடிகை ஆன்ட்ரியா தமிழில் பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். மேலும் ஒரு திறமையான பாடகி என்பது அனைவரும் அறிந்ததே. பல்வேறு திரைப்பட பாடல்களையும் பாடியிருக்கிறார். இவரது நடிப்பில் வெளிவந்த வட சென்னை, தரமணி, ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களோடேயே நல்ல வரவேற்பை பெற்றதுடன் திறமையான நடிகையாக பார்க்கப்பட்டார். தற்போது அவர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று அபார நம்பிக்கையோடு இருப்பதாக தெரிகிறது.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்புக்கும் ஆண்ட்ரியா தானே டப்பிங் பேசியுள்ளார். முதல் முறையாக தெலுங்கில் ஆண்ட்ரியா டப்பிங் பேசுகிறார். இது சம்மந்தமான வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Andrea Jeremiah (@therealandreajeremiah)

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்