கார்த்திக் சுப்புராஜ் சொன்ன சூப்பர் கதை.. வேண்டாம் என சொல்லி ‘கங்குவா’ குழியில் விழுந்த சூர்யா..!

Mahendran

செவ்வாய், 22 ஏப்ரல் 2025 (11:53 IST)
கார்த்திக் சுப்பராஜ் சொன்ன சூப்பர் கதையை வேண்டாம் என்று சொல்லிவிட்டு, சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ‘கங்குவா’ படத்தில் சூர்யா கமிட்டானதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நடிகர் சூர்யா, கடந்த 2022 ஆம் ஆண்டு எதற்கும் துணிந்தவன் என்ற படத்தை முடித்துவிட்டு, அடுத்து என்ன படம் பண்ணலாம் என்ற ஆலோசனையில் இருந்த நிலையில், தான் கார்த்திக் சுப்புராஜ் சூப்பரான ஒரு மாஸ் ஹீரோ கதையை சொன்னார். 
 
அதை கதையை கேட்டு, கிட்டத்தட்ட ஓகே சொன்னேன். சூர்யா திடீரென சிறுத்தை சிவா கூறிய ‘கங்குவா’ கதையை ஓகே செய்து, படப்பிடிப்பையும் தொடங்க அனுமதித்து விட்டார். இதனால் கார்த்திக் சுப்புராஜ் சொன்ன கதை படமாகாமல் இருந்தது. 
 
இந்த நிலையில்தான் கார்த்திக் சுப்புராஜ் மகான் படத்தை முடித்துவிட்டு, ’டபுள் எக்ஸ்’ படத்துக்கு சென்று விட்டார். அதன் பிறகு, மீண்டும் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் சந்திப்பு நடந்த போதுதான், நீங்கள் ஏற்கனவே சொன்ன அந்த கதை அப்படியே இருக்கட்டும், வேறொரு புதிய கதை  சொல்லுங்கள் என சூர்யா கேட்டதாகவும், அப்போதுதான் ரெட்ரோ படத்தை படத்தின் கதையை கூறிய நிலையில் இருவரும் சேர்ந்ததாகவும் கூறப்படுகிறது. 
 
கார்த்திக் சுப்புராஜ் முதலில் சொன்ன கதையில் மட்டும் சூர்யா நடித்திருந்தால், அந்த படம் மிகப்பெரிய மாஸ் படமாக இருந்திருக்கும் என்று திரை உலக வட்டாரங்கள் கூறி வருகின்றன.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்