இந்தியன் 2 பார்த்தேன்… இன்னும் கொஞ்சம் லெந்த் கொறச்சிருக்கலாம்… பிரபல நடிகை கருத்து!

vinoth
வெள்ளி, 26 ஜூலை 2024 (16:04 IST)
கமல்ஹாசன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில்  எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸான இந்தியன் 2 திரைப்படம் படுமோசமான விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதுவரை ஷங்கர் கேரியரில் இல்லாத அளவுக்கு மோசமான வசூலையும் பெற்று வருகிறது.

படத்தின் குறைகளில் மிக முக்கியமான ஒன்றாக சொல்லப்பட்டது படத்தின் நீளம்தான். இதனால் படத்தின் படத்தின் நீளத்தை 12 நிமிடங்கள் குறைத்தனர். ஆனாலும் படம் ரசிகர்களைப் பெரியளவில் கவரவில்லை. இந்நிலையில் கமலுடன் 80 களில் அதிக படங்களில் நடித்த அம்பிகா படம் பார்த்துவிட்டு தன்னுடைய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.

அதில் “இந்தியன் 2 படம் பார்த்தேன். எனக்குப் பிடிச்சது. 15 நிமிஷன் நீளத்தைக் குறைக்கலாம் அப்படின்னு ஃபீல் பண்ணேன். கடின உழைப்பு, நடிப்பு, நிறைய பணம் எல்லாம் தெரியுது” எனக் கூறியுள்ளார். ஏற்கனவே 12 நிமிடம் குறைக்கப்பட்ட நிலையில் இன்னும் 15 நிமிடம் குறைத்திருக்கலாம் என அம்பிகா கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்