பிரபல ஓடிடியில் வெளியானது யோகி பாபுவின் சட்னி சாம்பார் வெப் சீரிஸ்!

vinoth
வெள்ளி, 26 ஜூலை 2024 (15:48 IST)
அண்மை காலமாக தமிழில் ரிலீஸ் ஆகும் பெரும்பாலான  படங்களில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார்.  அந்த வகையில் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்ததை அடுத்து இப்போது மேலும் சில படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இந்நிலையி அவர் மொழி, பயணம் உள்ளிட்ட படங்களை இயக்கிய ராதா மோகன் இயக்கத்தில் சட்னி சாம்பார் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். பிரபல ஓட்டல் நிறுவனம் ஒன்று கையேந்தி பவன் கடை வைத்திருக்கும் யோகி பாபுவிடம் அவரின் சட்னி ரெசிப்பி கேட்டு கூட்டு சேர முயற்சிப்பதும், அதற்கு யோகி பாபுவின் ரியாக்‌ஷன் என்ன என்பதுமே டீசரில் ஜாலி மூடில் இந்த தொடரில் சொல்லப்பட்டுள்ளது.

இந்த தொடரின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில் தற்போது இந்த சீரிஸ் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்