அஜித் என் மேல் ‘அதற்காக’ அதிருப்தியில் இருக்கலாம்.. வெங்கட்பிரபு பகிர்ந்த தகவல்!

vinoth

செவ்வாய், 24 டிசம்பர் 2024 (07:25 IST)
தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க இயக்குனராக இருப்பவர் வெங்கட்பிரபு. சென்னை 28 திரைப்படத்தின் மூலம் தன்னுடைய திரை வாழ்க்கையைத் தொடங்கிய அவர் அஜித், சூர்யா, சிம்பு, கார்த்தி மற்றும் விஜய் ஆகிய முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் இயக்கி ஹிட்ஸ்களைக் கொடுத்துள்ளார்.

சென்னை 28, சரோஜா போன்ற மீடியம் பட்ஜெட் படங்களை இயக்கிக் கொண்டிருந்த அவரை முன்னணி இயக்குனர் ஆக்கியது அஜித் நடிப்பில் அவர் இயக்கிய மங்காத்தா திரைப்படம்தான். அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதையடுத்துதான் பல முன்னணி நடிகர்களின் பார்வை அவர் மேல் விழுந்தது.

மங்காத்தா வெற்றிக்குப் பிறகு அஜித் வெங்கட்பிரபு கூட்டணி அமையவில்லை. இது குறித்த் பேசியுள்ள வெங்கட்பிரபு “மங்காத்தா படத்துக்குப் பிறகு சில முறை அஜித்துடன் மீண்டும் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் என்னால் அப்போது அந்த படங்களை இயக்க முடியவில்லை. வேறு படங்களில் பிஸியாக இருந்தேன். அதனால் அவருக்கு என் மேல் அதிருப்தி இருக்கலாம் என நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்