வடிவேலுவோடு அந்த படம் பண்ண முடியாமல் போக இதுதான் காரணம்- சிம்புதேவன் பகிர்ந்த தகவல்!

vinoth

வியாழன், 25 ஜூலை 2024 (10:42 IST)
நடிகர் வடிவேலு 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு சினிமாவில் தீவிரமாக நடிக்கவில்லை. இடையில் சில படங்களில் நடித்திருந்தாலும் எதுவும் அவர் பெயர் சொல்லும் படங்களாக அமையவில்லை. இந்நிலையில் தனது வெற்றிப்படமான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால் அந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் தொடர்ந்து நடிக்க மறுத்ததால் அந்த படம் கைவிடப்பட்டது.

இந்நிலையில் இந்த இடைப்பட்ட காலத்தில் வடிவேலு கொடுத்த நேர்காணல்களில் இயக்குனர்கள் சிம்புதேவன் மற்றும் ஷங்கர் ஆகியோரை தரக்குறைவாகப் பேசி வந்தார். ஆனால் சிம்புதேவன் எப்போது பேசினாலும் வடிவேலு மீது இன்னும் மரியாதை இருப்பதாகவே தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் இப்போது ஒரு நேர்காணலில் அவர் “இம்சை அரசனுக்குப் பிறகு வடிவேலுவுக்காக ஒரு மாயாஜாலக் கதையை எழுதினேன். ஆனால் அதற்குள் அறை எண் 305ல் கடவுள் படத்தை தொடங்கினோம். ஒரு ஆறேழு ஆண்டுகள் கழித்து வடிவேலு கதையை படமாக்கலாம் என நினைத்த போது அப்போது தமிழ் சினிமா முழுவதும் பேய் ட்ரண்ட் ஆக இருந்தது. என் கதையும் அப்படியே இருந்ததால் அந்த படத்தை எடுக்க முடியவில்லை. அந்த படத்தின் தலைப்பு மர்ம வேதாளம்” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்