கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக பிரச்சார இசைத் தொகுப்பை உருவாக்கும் ஏ ஆர் ரஹ்மான்!

vinoth
ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (10:39 IST)
அமெரிக்காவில் டிசம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும், தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸும் மோதிக் கொள்கின்றனர். இதனால் நாடு முழுவதும் பிரச்சாரம் சூடு பிடித்து வருகிறது. இருவரும் நேருக்கு நேர் விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

கடந்த மாதம் டொனால்ட் ட்ரம்ப் பென்சில்வேனியாவில் பிரச்சாரம் செய்தபோது மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் ட்ரம்ப்பின் காதில் தோட்டா உரசி சென்றதால் அவர் அதிர்ஷ்டவசமாக தப்பினார். அதன் பின்னர் சமீபத்தில் கமலா ஹாரிஸின் பிரச்சார அலுவலகத்தில் துப்பாக்கி தாக்குதல் நடந்துள்ளது. இவையெல்லாம் தேர்தல் களத்தைப் பதற்றமாக்கியுள்ளன.

இந்நிலையில் கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக ஏ ஆர் ரஹ்மான் பிரச்சார இசைத் தொகுப்பை உருவாக்கும் பொறுப்பை ஏற்றுள்ளதாக சொல்லப்படுகிறது. 30 நிமிட அளவுக்கு இந்த இசைத்தொகுப்பு இருக்கும் எனவும், அது இந்திய மற்றும் ஆப்பிரிக்க இசையின் கூட்டுத்தொகுப்பாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்