மனசிலாயோ பாடலுக்கு அந்த ஐடியா கொடுத்ததே சூப்பர் ஸ்டார்தான்… அனிருத் சொன்ன சீக்ரெட்!

vinoth
ஞாயிறு, 13 அக்டோபர் 2024 (10:18 IST)
ஜெயிலர் என்ற சூப்பர் ஹிட் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் த செ ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையிக், எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவில் வேட்டையன் படம் உருவாகியுள்ளது.

ஆனால் ரஜினியின் முந்தைய படமான ஜெயிலர் படத்துக்குக் கிடைத்த முதல் நாள் வரவேற்பு வேட்டையன் படத்துக்குக் கிடைக்கவில்லை. இதனால் தமிழ்நாட்டில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் 17 கோடி ரூபாய் அளவுக்குதான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. உலகளவில் 60 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இது எதிர்பார்த்த வசூலை விடக் குறைவு என்று சொல்லப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களிலும் பெரியளவில் படம் பிக்கப் ஆகவில்லை என்று சொல்லப்படுகிறது.

படத்தில் இடம்பெற்றுள்ள மனசிலாயோ பாடல் தியேட்டரில் ரசிகர்களை ஆட்டம் போட வைத்துள்ளது. இந்த பாடலில் மலேசியா வாசுதேவன் குரல் ஏ ஐ தொழில்நுட்பம் மூலமாக மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது பற்றி பேசியுள்ள அனிருத் “அந்த பாடலில் மலேசியா வாசுதேவன் குரலைப் பயன்படுத்தலாம் என்று ஐடியா கொடுத்ததே சூப்பர் ஸ்டார்தான். அவர்தான் வாசு சார்  குரலைப் பயன்படுத்தலாமா எனக் கேட்டார். அதன் பிறகு யுகேந்திரன் பாட, அதை நாங்கள் ஏ ஐ தொழில்நுட்பத்துக்கு மாற்றினோம்” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்