ஊடக பேட்டியின்போது சீயர்ஸ் சொல்லி பீர் குடித்த கமலா ஹாரீஸ்.. வீடியோ வைரல்..!

Mahendran

புதன், 9 அக்டோபர் 2024 (13:59 IST)
அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் களமிறக்கப்பட்டுள்ளார். முதலில், 82வது வயதை எட்டிய ஜோ பைடன், தனது வயதைக் கருத்தில் கொண்டு, தேர்தலில் இருந்து விலகினார்.
 
இந்திய - ஆப்பிரிக்க வம்சாவளியைக் சேர்ந்த கமலா, அமெரிக்காவில் தற்போது நடந்த கருத்துக்கணிப்புகள் அடிப்படையில், அவரது எதிர் வேட்பாளர் டிரம்பை விட சற்று அதிக ஆதரவைப் பெற்றிருக்கிறார். சியானா கல்லூரி மற்றும் தி நியூயார்க் டைம்ஸ் நடத்திய தேசிய கருத்துக்கணிப்பில், ஹாரிஸ் 49% முதல் 46% வரை ஆதரவு பெற்று, டிரம்பை முந்தியுள்ளார்.
 
சமீபத்திய நேருக்கு நேர் விவாதத்தில், டிரம்பைப் திறம்பட சமாளித்த கமலா, பலராலும் அவரது தலைமைப்பணிக்கு நம்பிக்கை வைக்க வைத்துள்ளார். தற்போது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் கமலா, லேட் நைட் ஊடக நிகழ்ச்சியில் பங்கேற்று, தொகுப்பாளர் ஸ்டெப்பான் கால்பெர்ட்டுடன் விவாதித்தார்.
 
அந்த நிகழ்ச்சியின் போது, மில்லர் ஹை லைப் என்ற பீர் கமலாவுக்கு வழங்கப்பட்டது.  கமலா ஹாரீஸ் தனது கையில் பீர் கேன் பாட்டிலை சீயர்ஸ் சொல்லி உடைத்து குடிக்கும் வீடியோ, தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்