2.0 : "9" என்ற வார்த்தை நீக்கவேண்டும் - ஷங்கருக்கு எச்சரிக்கை விடுத்த சென்சார்

Webdunia
புதன், 21 நவம்பர் 2018 (18:31 IST)
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘2.0’ படத்தில் இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகளையும் , வசனங்களையும் நீக்கப்பட்டதன் விவரம் தற்போது வெளியாகியுள்ளது. 
 
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 திரைப்படத்தின் சென்சார் தகவல்கள் வெளியாகி உள்ளன. மொத்தம் 2 மணிநேரம் 28 நிமிடங்கள் 52 நொடிகளுக்கு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
 
இதுவரை உருவான ‌ஷங்கர் படத்திலேயே பிரமாண்டமான பொருட்செலவில் உருவாக்கப்பட்டு மிகக்குறைந்த நேரம் ஓடும் திரைப்படமாக 2.0 படம் இருக்கும். 
 
இந்நிலையில் படத்தில் இடம்பெறுள்ள காட்சிகளில் தணிக்கைக் குழுவினர் பெரிய அளவில் கத்திரி வைக்கவில்லை. இருந்தாலும் சில வசனங்களையும், வார்த்தைகளையும் நீக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். 
 
அந்த வரிசையில்  ‘யுனிசெல்’ என்ற நிறுவனத்தின் பெயரைத் திரைப்படத்தில் எங்கெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார்களோ, அங்கெல்லாம் மாற்றச் சொல்லியிருக்கிறார்கள். அதுபோலவே, ‘புற்று நோய்,’ ‘கருச்சிதைவு’, ‘ஆண்மைக் குறைவு’, ‘லஞ்சம்’, ‘45 வருடம்’ ஆகிய வசனங்களை நீக்கச் சொல்லி உத்தரவிடப்பட்டிருக்கிறது.
 
மேலும் படத்திற்கு பக்கபலமாக அமைந்த ‘9’ என்ற வார்த்தையை நீக்கச் சொல்லியும் அறிவுறுத்தியிருக்கிறார்கள். ‘9’ என்ற எண்ணை, ‘வார்த்தை’ என சென்சார் குழு குறிப்பிட்டிருப்பதன் காரணம் அது ஒரு தனி நபரைக் குறிப்பதாகவே இருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்