பிப்ரவரி மாத சிறந்த வீரர் யார்? அஸ்வின் & ரூட்டுக்கு இடையே போட்டி!

Webdunia
புதன், 3 மார்ச் 2021 (08:30 IST)
ஐசிசி மாதாந்திர சிறந்த வீரர்களை தேர்வு செய்து அறிவித்து வருகிறது.

சர்வதேசக் கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி ஆண்டுதோறும் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் இப்போது புதிய முன்னெடுப்பாக இனிமேல் விருதுகளை மாதம் தோறும் வழங்க உள்ளது. இதற்கான வீரர்கள் பரிந்துரையை ரசிகர்கள் ஆன்லைன் மூலமாக செய்யலாம் என அறிவுறுத்தியுள்ளது. இந்த விருதுகள் மாதம்தோறும்  முதல் திங்கள் கிழமை அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் இந்த மாதத்துக்கான சிறந்த வீரர்களுக்கான பட்டியலில் இந்தியாவின் ரவி அஸ்வின் மற்றும் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. கடந்த மாதம் ரிஷப் பண்ட் இந்த விருதைத் தட்டிச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்