சன்ரைசர்ஸை அடித்து துவைத்த ஸ்டார்க்! - பேட்டிங்கிலும் அசத்தும் டெல்லி!

Prasanth Karthick

ஞாயிறு, 30 மார்ச் 2025 (18:23 IST)

இன்றைய மதிய போட்டியில் சன்ரைசர்ஸை வெளுத்த டெல்லி அணி பேட்டிங்கிலும் அதிரடியாக ஆடி வருகிறது.

 

ஐபிஎல் போட்டிகளில் இன்று மதிய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதி வருகின்றன. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி வழக்கம்போல பேட்டிங்கை கையில் எடுத்தது. சரமாரியாக ரன்களை அடித்து குவித்துவிட்டு சேஸிங்கில் கட்டுப்படுத்தும் கடப்பாறை பேட்டிங் உத்தியை பயன்படுத்த அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

 

ஆனால் டெல்லி அணியின் பந்துவீச்சில் சன்ரைசர்ஸின் கடப்பாரை லைன் அப் ஆட்டம் கண்டு வருகிறது. அபிஷேக் சர்மாவை முதல் ஓவரிலேயே ரன் அவுட் செய்தார் விப்ராஜ் நிகம். அதை தொடர்ந்து அக்‌ஷர் படேல் இரண்டே ரன்களில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் கேட்ச் அவுட் ஆனார். அதிரடியாக விளையாட வந்த நிதிஷ் குமார் ரெட்டி, அதே ஓவரில் மிட்செல் ஸ்டார்க் பந்தில் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். தொடர்ந்து 4 வது ஓவரில் அதே மிட்செல் ஸ்டார்க் பந்து வீச்சில் ட்ராவிஸ் ஹெட்டும் கேட்ச் கொடுத்து 22 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். 

 

க்ளாசன் அடுத்து இருக்கிறார் என்ற நம்பிக்கை இருந்து வந்த நிலையில் 32 ரன்களில் க்ளாசனையும் பொட்டலம் கட்டினால் டெல்லியின் மோகித் சர்மா. அனிகத் வர்மா மட்டும் நின்று விளையாடி 74 ரன்கள் குவித்து குல்தீப் யாதவ் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதற்கு பிறகு வந்த கேப்டன் பேட் கம்மின்ஸ் உள்பட எல்லாருமே சிங்கிள் டிஜிட் ரன்னிலேயே பொட்டலம் கட்டி வெளியேற்றப்பட்ட நிலையில், 18.4 ஓவர்களுக்கு ஆல் அவுட் ஆன சன்ரைசர்ஸ் 163 ரன்களையே எடுத்துள்ளது.

 

சன்ரைசர்ஸின் அதிரடி ஆட்டம் எடுபடாமல் போனதுடன், பந்துவீச்சில் டெல்லியை கட்டுப்படுத்த முடியாமல் தற்போது திணறி வருகின்றனர். சேஸிங் இறங்கிய டெல்லி அணியின் மெக்கர்க், டூ ப்ளெசிஸ் பார்ட்னர்ஷிப் போட்டி விக்கெட் இழக்காமல் அடித்து ஆடி வந்த நிலையில் 9வது ஓவரில் அன்சாரி பந்துவீச்சில் இருவர் விக்கெட்டும் வீழ்ந்தது ஆனால் அதற்குள் அணியின் ஸ்கோர் 90ஐ தாண்டி விட்டது. தொடர்ந்து 11.2வது ஓவரில் கே எல் ராகுல் விக்கெட் விழுந்த நிலையில் டெல்லி அணி 115 ரன்களை குவித்து வெற்றியை நோக்கி முன்னேறி வருகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்