இந்திய ஸ்பின்னர்களை அடித்து நொறுக்கி ஆடலாமே! – இங்கிலாந்துக்கு விவ் ரிச்சர்ட்ஸ் அறிவுரை!

திங்கள், 1 மார்ச் 2021 (12:08 IST)
இந்தியாவில் பிட்ச்கள் மோசமாக இருப்பதாக இங்கிலாந்து வீரர்கள் கூறியுள்ளதற்கு வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் அறிவுரை வழங்கியுள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்து வரும் நிலையில் 2-1 என்ற நிலையில் இந்தியா முன்னிலையில் உள்ளது. கடந்த இரண்டு டெஸ்ட்டிலும் தோல்வியை தழுவியதற்கு இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவின் பிட்ச் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கிரிக்கெட் வீரர் விவ் ரிச்சர்ட்ஸ் “சமீபமாக இங்கிலாந்து வீரர்கள் இந்தியா பிட்ச் குறித்து பேசியதை பற்றி என்னிடம் கேட்கிறார்கள். ஒவ்வொரு நாடும் அவரவர் வசதிக்குதான் பிட்ச் வைப்பார்கள். நானாக இருந்தாலும் அப்படி ஒரு பிட்ச்தான் கேட்பேன், இந்திய வீரர்கள் மற்ற நாட்டு பிட்ச்களில் விளையாடி வெற்றி பெறவில்லையா? எந்த களத்திலும் விளையாட பழக வேண்டும். உங்களை யார் ரன்களை அழகாக மரபான முறையில் ஸ்கோர் செய்ய கேட்டது. இந்திய ஸ்பின்னர்களை அடித்து நொறுக்கி ஆடலாமே. இங்கிலாந்து தன்னை அப்டேட் செய்து கொள்ள இது நல்ல வாய்ப்பு” என கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்