டெஸ்ட் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்களுக்கான தரவரிசியை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் பேட்ஸ்மேன்கள் வரிசையில் நியுசி கேப்டன் கேன் வில்லியம்ஸன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கடுத்த இடத்தில் ஸ்மித் இருக்க சென்னை டெஸ்ட்டில் இரட்டை சதம் அடித்த ஜோ ரூட் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 2017 ஆம் ஆண்டுக்கு பிறகு அவர் முன்னணி இடத்துக்கு வந்துள்ளார். இந்திய அணியின் ரோஹித் ஷர்மா இதுவரை இல்லாத அளவுக்கு 10 இடங்களுக்குள் வந்துள்ளார். அவர் இப்போது 8 ஆவது இடத்தில் உள்ளார். இந்திய கேப்டன் கோலி 5 ஆவது இடத்திலும் புஜாரா 10 ஆவது இடத்திலும் உள்ளனர்.
அதே போல கடந்த சில போட்டிகளாகக் கலக்கி வரும் சுழல்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 3 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இது அவர் பெற்ற சிறந்த தரவரிசையாகும். பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ் முதலிடத்தில் உள்ளார். இந்திய அணியின் பூம்ரா 9 ஆவது இடத்தில் உள்ளார்.