இந்தியா vs இங்கிலாந்து ஒருநாள் தொடர்… புனேவில் நடத்துவதில் சிக்கல்!

சனி, 27 பிப்ரவரி 2021 (08:30 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்க உள்ள ஒருநாள் தொடரை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில் இந்திய அணி 2-1என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. நான்காவது டெஸ்ட் மற்றும் அதையடுத்து வரும் 5 டி 20 போட்டிகளும் அகமதாபாத் மைதானத்திலேயே நடக்க உள்ளது.

அதையடுத்து வரும் 3 ஒருநாள் போட்டிகளும் புனே MCA மைதானத்தில் நடக்க இருந்தன. ஆனால் இப்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் அங்கு போட்டிகளை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் வேறு இடத்துக்கு மாற்றப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்