நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் அணிக்கு எதிரான விறுவிறுப்பான ஆட்டத்தில், சிஎஸ்கே அணி கடைசி நேரத்தில் தோனி மற்றும் ஜடேஜா களத்தில் இருந்தும் வெற்றி பெற முடியாமல் தோல்வியடைந்தது. இது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அடுத்து, 183 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணியின் முதல் ஓவரிலேயே ரச்சின் ரவீந்திரா வெளியேறினார். அதன் பின்னர் மெதுவாக ரன்கள் குவித்த நிலையில், கேப்டன் ருத்ராஜ் ஓரளவு நிலைத்து விளையாடி 63 ரன்கள் எடுத்தார்.
இருப்பினும், கடைசி நேரத்தில் வெற்றிக்காக ஜடேஜா மற்றும் தோனி போராடிய நிலையில், இருபதாவது ஓவரில் தோனி அவுட்டாகி வெளியேறியதால், சிஎஸ்கே அணி வெற்றியைப் பெற முடியவில்லை.
இறுதியில், சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்து, 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. "தோனி களத்தில் இருந்து இருந்தால் கண்டிப்பாக வெற்றி கிடைத்திருக்கும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.