வருண் சக்கரவர்த்தி துருப்பு சீட்டாக இருப்பார்… சுரேஷ் ரெய்னா நம்பிக்கை!

Webdunia
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (16:14 IST)
இந்திய அணியில் இருக்கும் வருண் சக்கரவர்த்தி ஆதிக்கம் செலுத்துவார் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

ஐபிஎல் தொடரில் கடந்த இரு சீசன்களாக சிறப்பாக விளையாடி வரும் வருண் சக்கரவர்த்தி டி 20 உலகக்கோப்பைக்கான அணியில் இடம்பிடித்துள்ளார். இந்நிலையில் ஆடும் லெவனில் அவர் இடம்பெற வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

வருண் சக்கரவர்த்தி குறித்து பேசியுள்ள சுரேஷ் ரெய்னா ‘அவருக்கு சர்வதேச போட்டிகளில் விளையாடிய அனுபவம் குறைவுதான் என்றாலும் ஆதிக்கம் செலுத்துவார். அமீரக மைதானங்கள் சுழல்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைவன. ’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்