நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி எளிதாக வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 159 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணிக்கு நல்ல தொடக்கம் அமைந்த போதும் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை.
இந்நிலையில் தோல்விக்குப் பின் பேசிய ரிஷப் பண்ட் “இந்த போட்டியில் டாஸ் முக்கியப் பங்கு வகித்தது. இந்த மைதானத்தில் முதலில் பந்து வீசுபவர்களுக்கு நிறைய உதவிகள் கிடைக்கின்றன. நாங்கள் 20 ரன்கள் குறைவாக சேர்த்துவிட்டோம். இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக அமைகிறது. ஆனால் இதையெல்லாம் காரணமாக சொல்ல விரும்பவில்லை. இதில் இருந்து கற்றுக் கொள்ள விரும்புகிறோம்” எனக் கூறியுள்ளார்.