ஆனால் தனக்குரிய சம்பளம், போனஸ் உள்ளிட்ட பணம் கிடைக்கவில்லை என கிளெஸ்பி புகார் அளித்துள்ளார். பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் இங்கிலாந்துக்கு எதிரான வெற்றி, மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் வெற்றிக்கான போனஸும், சம்பளமும் வாரியம் வழங்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முற்றிலுமாக மறுத்துள்ளது. “முன்னாள் தலைமை பயிற்சியாளர் நான்கு மாதங்களுக்கான நோட்டிஸ் காலத்தை பின்பற்றாமல் திடீரென பதவியிலிருந்து விலகியுள்ளார். இது அவரது ஒப்பந்த விதிகளை மீறுவது ஆகும், எனவே தான் அவரது சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.