ராணாவின் பேன் இந்தியா திரைப்படம்… இயக்குனர் மிலிந்த் ராவ் ஒப்பந்தம்!
செவ்வாய், 19 அக்டோபர் 2021 (16:00 IST)
நடிகர் ராணா நடிப்பில் அடுத்து உருவாக உள்ள திரைப்படம் பேன் இந்தியா திரைப்படமாக உருவாக உள்ளதாம்.
அவள் மற்றும் நெற்றிக்கண் ஆகிய படங்களின் இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஒரு வெப் சீரிஸில் ஆர்யா நடிக்க உள்ளார். இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் சீரிஸாக உருவாக உள்ளதாம். அதற்கான பணிகள் இப்போது நடந்து வருகின்றன.
இந்நிலையில் மிலிந்த் ராவ், இப்போது ராணா நடிப்பில் ஒரு படத்தை இயக்கவும் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். பேன் இந்தியா படமாக உருவாகும் இந்த படத்தை ராணாவே தயாரிக்க உள்ளாராம். வெப் சீரிஸ் படப்பிடிப்பு முடிந்ததும் இந்த படத்தைத் தொடங்க உள்ளதாக தெரிகிறது.