நேற்று நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி எளிதாக வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 159 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அந்த அணிக்கு நல்ல தொடக்கம் அமைந்த போதும் அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை.
இதன் பின்னர் ஆடவந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18 ஆவது ஓவரில் 2 விக்கெட்கள் இழப்புக்கு இலக்கை எட்டியது. அந்த அணியின் கே எல் ராகுல் கடைசிவரை ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 57 ரன்கள் சேர்த்தார். இந்த போட்டி முடிந்ததும் லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கே எல் ராகுல் அருகே வந்து கைகொடுத்து அவரிடம் பேச முயன்றார். ஆனால் மரியாதைக்குக் கைகொடுத்து விட்டு அவரிடம் பேசாமல் நகர்ந்தார் ராகுல்.