மும்பைக்கு 175 டார்கெட் கொடுத்த பஞ்சாப்

Webdunia
வெள்ளி, 4 மே 2018 (22:04 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் மும்பை அணிகள் இந்தூரில் மோதி வருகின்றன. டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச முடிவு செய்ததால் பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. 
 
பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 174 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் கெயில் 50 ரன்கள் எடுத்தார்.
 
மும்பை அணியின் மெக்லெங்கன், பும்ரா, பாண்ட்யா, மார்க்கண்டே மற்றும் கட்டிங் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்
 
இந்த நிலையில் 175 என்ற இலக்கை நோக்கி மும்பை அணி தற்போது விளையாடி வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்கள் யாதவ் மற்றும் லீவிஸ் விளையாடி வருகின்றனர்.
 
இன்றைய போட்டியில் மும்பை வென்றால் அடுத்து சுற்றுக்கு செல்ல ஒரு வாய்ப்பு உள்ளது. அதேபோல் நல்ல ரன்ரேட்டில் பஞ்சாப் வெற்றி பெற்றால் முதலிடம் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்