இன்றைய ஐபிஎல் போட்டி: MI vs KXIP - மீளுமா மும்பை?

வெள்ளி, 4 மே 2018 (14:17 IST)
ஐபிஎல் போட்டியின் 34 வது லீக் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது. இன்றைய போட்டியில் ரோகித் ஷர்மா தலைமையில் மும்பை அணியும், அஸ்வின் தலைமையில் பஞ்சாப் அணியும் மோதவுள்ளன. 
 
இதுவரை எழு போட்டிகளில் விளையாடி உள்ள பஞ்சாப் அணி 5 வெற்றிகளை பெற்றுள்ளது. பஞ்சாப் அணி வீரர்கள் தங்களது சிறந்த பங்களிப்பை அளித்து வருகினறனர். 
 
மும்பை அணி இதுவரை விளையாடியுள்ள எட்டு போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுள்ளது. மும்பை துவக்கம் முதல் சரியாக விளையாடாமல் சொதப்பி வருகிறது. 
 
முந்தைய லீக் ஆட்டத்தில் பெங்களூருவிடம் தோல்வி கண்ட மும்பை அணி எஞ்சிய எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற நெருக்கடியுடன் இந்த போட்டியில் களமிறங்குகிறது. 
 
எனவே, கருத்தை நெறிக்கும் சூழ்நிலையில் இருந்து, மும்பை அணி மீளுமா? என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்