168 என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. முதல் ஓவரிலேயே இஷான்கான் விக்கெட்டையும், 4வது ஓவரில் யாதவ் மற்றும் ரோஹித் சர்மாவின் விக்கெட்டையும் இழந்து தத்தளித்தது. இருப்பினும் பாண்டியா அதிரடியாக விளையாடி 50 ரன்கள் குவித்தார். இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 153 ரன்கள் எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. பெங்களூரு அணியின் பந்துவீச்சாளர் டிம் செளதி ஆட்டநாயகன் விருதினை வென்றார்.