இந்தியாவை தோற்கடித்தால் என்னுடன் சாப்பிடலாம்: வங்கதேச வீரர்களுக்கு ஆஃபர் கொடுத்த நடிகை..!

Webdunia
வியாழன், 19 அக்டோபர் 2023 (10:34 IST)
இன்று நடைபெறும் போட்டியில் இந்தியாவை தோற்கடித்தால் வங்கதேச வீரர்கள் என்னுடன் சாப்பிடலாம் என பாகிஸ்தான் நடிகை ஒருவர் ஆஃபர் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வங்கதேச அணி வென்றால் என்னுடன் மீன் குழம்புடன் சாப்பிடலாம் என்று பிரபல பாகிஸ்தான் நடிகை சேகர் சின்வாரி என்பவர் தெரிவித்துள்ளார். இதற்கு ரசிகர்கள் காட்டும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்

பாகிஸ்தான் அணியை இந்தியா தோல்வியடைய செய்ததன் காரணமாக வன்மத்துடன் நடிகை இவ்வாறு பதிவு செய்துள்ளதாக பலர் கமண்ட் தெரிவித்து வருகின்றனர். இன்று நடைபெறும் போட்டியில் இந்தியாவை  ஜெயித்து நடிகையுடன் சாப்பிடும் வாய்ப்பை பெறுவார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்