மீண்டும் ஐசிசி டாப் 10-ல் ரோஹித் ஷர்மா!

வியாழன், 19 அக்டோபர் 2023 (09:58 IST)
ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா மீண்டும் முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டிகளில் ரோஹித் ஷர்மா சிறப்பாக விளையாடியதை அடுத்து அவர் தரவரிசையில் 11 ஆம் இடத்தில் இருந்து 6 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

முதல் இடத்தில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமும், இரண்டாம் இடத்தில் இந்திய வீரர் ஷுப்மன் கில்லும் உள்ளனர். மூன்றாம் இடத்தில் குயிண்ட்டன் டி காக் இருக்கிறார். இந்திய வீரர்களில் விராட் கோலி 8 ஆவது இடத்தில் உள்ளார். 8 ஆவது இடத்தை டேவிட் மலானோடு அவர் பகிர்ந்துகொண்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்