சிறுமி ஒருவர் பந்து வீசும் வீடியோ வைரலாகி வரும் நிலையில் அதை பகிர்ந்துள்ள சச்சின் டெண்டுல்கர், இந்த சிறுமி ஜாகிர்கானை நியாபாகப்படுத்துவதாக கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தின் பிரதாப்கர் பகுதியை சேர்ந்த சிறுமி சுஷீலா மீனா. சிறுவயதிலிருந்தே கிரிக்கெட்டில் ஆர்வமாக உள்ள இவர் உள்ளூர் போட்டிகளிலும் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் இவர் பந்து வீசி பயிற்சி எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை கிரிக்கெட் கடவுள் என போற்றப்படும் சச்சின் டெண்டுல்கரும் பார்த்துள்ளார். அதை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த சச்சின் “மிருதுவான, கடினமற்றதாக உள்ளது பார்ப்பதற்கு. சுஷீலா மீனாவின் பந்துவீச்சு உங்களை நியாபகப்படுத்துகிறது ஜாகீர் கான். நீங்களும் இதை பார்த்தீர்களா?” என ஜாகீர் கானையும் டேக் செய்து கேட்டுள்ளார் சச்சின் டெண்டுல்கர்
சச்சின் டெண்டுல்கர் பகிர்ந்ததை தொடர்ந்து இந்த வீடியோ மேலும் வைரலாகத் தொடங்கியுள்ளது.
Edit by Prasanth.K