பாகிஸ்தான் வீரர்கள் காய்ச்சலில் இருந்து மீண்டுள்ளனர்… அணி நிர்வாகம் தகவல்!

வியாழன், 19 அக்டோபர் 2023 (09:43 IST)
உலக கோப்பை தொடருக்காக 7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளது பாகிஸ்தான் அணி. இதுவரை விளையாடிய போட்டிகளில் இந்தியாவிடம் மட்டும் தோற்றுள்ளது. அடுத்து வலிமை மிக்க ஆஸ்திரேலிய அணியை பெங்களூருவில் எதிர்கொள்கிறது.

இதற்காக கடந்த சில நாட்களாக பெங்களூருவில் தங்கி பயிற்சியை மேற்கொண்ட பாகிஸ்தான் வீரர்கள் சிலருக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் காய்ச்சல் ஏற்பட்டவர்களில் பெரும்பாலோனர் காய்ச்சலில் இருந்து மீண்டுவிட்டதாகவும் மீதமுள்ளவர்கள் தற்போது குணமாகி வருவதாகவும் பாகிஸ்தான் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆனால் யார் யாருக்கு காய்ச்சல் ஏற்பட்டது என்பதை அணி நிர்வாகம் வெளியிடவில்லை.

பாகிஸ்தான் மற்றும் ஆஸி அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை மதியம் 2 மணிக்கு பெங்களூருவில் நடக்க உள்ளது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டி என்பதால் பரபரப்பான ஆட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்