சாலை வசதிகள் கூட இல்லாத... ரவிக்குமாரை வாழ்த்திய கமலஹாசன்!

Webdunia
வெள்ளி, 6 ஆகஸ்ட் 2021 (09:54 IST)
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா இதுவரை இரண்டு பதக்கங்கள் மட்டுமே வென்றுள்ளது. இந்நிலையில் மல்யுத்தத்தில் இந்திய வீரர் ரவிக்குமார் தாஹியா இறுதிப் போட்டிக்கு நுழைந்துள்ளது இந்திய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
 
இதன் மூலம் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். ஆனால் தங்கம் வெல்வதே லட்சியம் என்று அவர் தெரிவித்துள்ளார். அவருக்கு இந்திய மக்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் நடிகர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், " சாலை வசதிகள் கூட இல்லாத கிராமத்தில் ஏழை விவசாயியின் மகனாகப் பிறந்து,சோதனைகள் பல கடந்து டோக்கியோ ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கும் ரவிக்குமார் தஹியாவிற்கு என் மனம் கனிந்த பாராட்டுக்கள். உங்களால் தேசம் பெருமிதம் கொள்கிறது என வாழ்த்தியுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்