ஒலிம்பிக் போட்டி: தமிழக வீராங்கனைகள் பங்கேற்பு...

வியாழன், 29 ஜூலை 2021 (22:05 IST)
ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக்-2020 போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்தியா சார்பில் மீரா சானு என்பவர் பளுதூக்குவதலில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார்.

அடுத்து பாண்ட்மிண்டன் காலிறுதிப் போட்டிக்கு இந்திய வீராங்கனை தகுதி பெற்றுள்ளார்.

இந்நிலையில், நாளை நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் தமிழக வீராங்கனைகள் இந்தியாவுக்காகக் கலந்துகொள்ளவுள்ளனர்.

நாளை நடைபெறவுள்ள 4/400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன், தனலட்சுமி, சேகர் உள்ளிட்டோர் பங்கேறவுள்ளனர். இவர்கள் ஜெயிக்க வேண்டுமென ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இவர்களுக்கு இணையதளத்தில் வாழ்த்துகளும் பாராட்டுகளும் குவிந்துவருகிறது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்