கோலி, ரோஹித் இந்திய அணியில் இல்லைன்னு யார் சொன்னா? - பிசிசிஐ செயலாளர் கொடுத்த அப்டேட்!

Prasanth Karthick

புதன், 14 மே 2025 (16:18 IST)

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஓய்வை அறிவித்த நிலையிலும் அவர்கள் அணியில் தொடர்வதாக பிசிசிஐ செயலாளர் தெரிவித்துள்ளார்.

 

முன்னதாக சர்வதேச டி 20 கிரிக்கெட் போட்டிகளில் ஓய்வை அறிவித்திருந்த விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளிலும் ஓய்வை அறிவித்தார். முன்னாள் இந்திய அணி கேப்டனான ரோஹித் சர்மாவும் இந்த இரண்டு பார்மெட் கிரிக்கெட்டுகளிலும் ஓய்வை அறிவித்துவிட்ட நிலையில் இனி அவர்கள் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளனர்.

 

தற்போது ஏ+ பிரிவில் ஆண்டுக்கு 7 கோடி சம்பளம் பெற்று வரும் அவர்கள், இனி ரூ.5 கோடி சம்பளம் உள்ள ஏ பிரிவுக்கோ, 3 கோடி சம்பளம் உள்ள பி பிரிவுக்கோ மாற்றப்படலாம் என பேசிக் கொள்ளப்பட்டது.

 

இந்நிலையில் இதுகுறித்து விளக்கமளித்துள்ள பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா “விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றிருந்தாலும் அவர்களின் ஏ+ க்ரேடு ஒப்பந்தம் தொடரும். அவர்கள் இன்னமுமே இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு பகுதியாகவே உள்ளனர்” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்