கோவிட் பிடியில் ஜப்பான் – அவசரநிலை நீட்டிப்பு

சனி, 31 ஜூலை 2021 (13:45 IST)
ஜப்பானில் கோவிட் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் டோக்யோவில் அவசரநிலை நீட்டிக்கப்பட்டு, அருகில் உள்ள பிற பிராந்தியங்களுக்கும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

 
ஜப்பான் தலைநகர் டோக்யோ, ஒசாகா நகரம் உள்ளிட்ட இடங்களில் கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளன. நாட்டில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு தொற்று பாதிப்பு பரவுவதாக எச்சரித்துள்ள பிரதமர் யோஷிஹிடே சுகா, மக்கள் வீட்டில் இருந்தே ஒலிம்பிக் போட்டிகளை காணுமாறு வலியுறுத்தியுள்ளார்.
 
கொரோனாவில் தீவிர பரவும் தன்மை கொண்ட டெல்டா திரிபால் புதிய தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. புதிய தொற்றுகள் அதிகரிப்பது குறையவில்லை என்றால், தீவிர பாதிப்பு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் மருத்துவ கட்டமைப்பு மீண்டும் அழுத்தத்திற்கு உள்ளாகும் என்றும் பிரதமர் சுகா தெரிவித்துள்ளார்.
 
முன்னதாக ஜப்பான் பெருந்தொற்றின் ஒரு புதிய “தீவிர அச்சம் நிறைந்த” கட்டத்திற்கு சென்றுள்ளதாக நாட்டின் சுகாதார அமைச்சர் நொரிஹிசா டமுரா தெரிவித்திருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்