ஐபிஎல் தேதி மீண்டும் அறிவிக்கப்பட்டாலும் தாய்நாடு சென்ற வெளிநாட்டு வீரர்கள் எஞ்சிய ஐபிஎல் போட்டிகளில் விளையாடத் தயங்குவதாக சொல்லப்படுகிறது. அப்படி விளையாடாத விரும்பாதவீரர்களை அணி உரிமையாளர்கள் கட்டாயப்படுத்த மாட்டார்கள் என்றும் விருப்பமிருப்பவர்கள் மட்டும் விளையாடலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் மீண்டும் தொடங்குவது பற்றி பேசியுள்ள சுனில் கவாஸ்கர் “ ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கும்போது DJ மற்றும் பெண்களின் உற்சாக நடனம் ஆகியவை இருக்கவேண்டாம் என விரும்புகிறேன். ஏனென்றால் பயங்கரவாத தாக்குதலில் சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களை இழந்துள்ளார்கள். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இத்தகையக் கொண்டாட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.