31 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்த இங்கிலாந்து: இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்!

Webdunia
சனி, 2 ஜூலை 2022 (19:37 IST)
31 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்த இங்கிலாந்து: இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது .
 
இந்திய அணி முதல் இன்னிங்சில் 416 ரன்களுக்கு ஆட்டமிழந்த நிலையில் தற்போது இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. 
 
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் ரிஷப் பண்ட் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் சதம் காரணமாக 416 ரன்கள் குவித்தது. குறிப்பாக பும்ரா ஒரே ஓவரில் 5 சிக்சர் அடித்தது சாதனையாக கருதப்படுகிறது.
 
இந்த நிலையில் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 31 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து விட்டது என்பதும், இரண்டு விக்கெட்டுகளையும் பும்ரா வீழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது இங்கிலாந்து அணி 385 ரன்கள் பின்னடைவில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்