ஒரே ஓவரில் 35 ரன்கள்… ஸ்டுவர்ட் பிராட் ஓவரில் சாதனை படைத்த பூம்ரா!

Webdunia
சனி, 2 ஜூலை 2022 (17:03 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் நேற்று இந்தியா தனது முதல் இன்னிங்சில் முதல் நாளில் 7 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் சேர்த்தது. இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களான கில் மற்றும் புஜாரே சொற்ப ரன்களில் அவுட் ஆகினர். அதேபோல் விஹாரி மற்றும் விராட் கோலியும் ஏமாற்றிய நிலையில் ரிஷப் பண்ட் மிக அபாரமாக விளையாடி 114 பந்துகளில் 146 ரன்கள் எடுத்தார். இதில் 19 பவுடர்கள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதையடுத்து இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்ற நிலையில் இந்திய அணி 413 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. ஜடேஜா சதம் அடித்து அசத்தினார். போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஸ்டூவர்ட் பிராட்டின் ஒரே ஓவரில் 35 ரன்கள் விளாசினார். டெஸ்ட் போட்டி ஒன்றில் ஒரே ஓவரில் அடிக்கப்பட்ட அதிக ரன்களாக இந்த சாதனையை பூம்ரா படைத்துள்ளார். முன்னதாக டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் கொடுத்த பவுலராகவும் பிராட் இடம்பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்