நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து: மஹாராஷ்டிராவில் ஒருவர் கொலை !

சனி, 2 ஜூலை 2022 (16:49 IST)
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா சமீபத்தில் இஸ்லாமிய இறைதூதரான நபிகள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது உலக அளவில் பெரும் விவாசத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து பாஜக விளக்க கடிதம் வெளியிட்டுள்ளதோடு, தேசிய செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கியும் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நுபுர் சர்மாவின் இந்த பேச்சை கண்டித்து இந்தியாவின் பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து, ராஜஸ்தான் மாநிலத்தில் நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்த டெய்லர் என்பவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் ராஜஸ்தானில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

 நுபுர்சர்மா விவகாரத்தில் சமீபத்தில் உச்ச நீதிமன்றம், நுபுர்சர்மா விவகாரத்தில் நாடு தீ பற்றி எரிகிறது என்று கூறி அவருக்கு கண்டனம் தெரிவித்தது.

இந்த நிலையில்,  மஹாராஷ்டிரா மாநித்தில் மருத்துக் கடை உரிமையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதில்,  நுபுர் சர்மாவிற்கு ஆதரவாக மருத்துக்கடை உரிமையாளர் கருத்துகளை வாட்ஸ் ஆப்பில் பகிர்ந்துள்ளார். இதை சிலர் முஸ்லிம்கள் உள்ள குரூப்பில் தவறுதலாகப் பகிர்ந்துள்ளதாகத் தெரிகிறது. பின்னர், இர்பான் என்பவர் அவரைக் கொலை செய்ய கூலிப்படையை ஏவி அவர்களுக்கு ரூ.10,000 கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில், அகமது, ஷாருக், அப்துல் தொபிக் , சோயப் கான், ரஷீத் உள்ளிட்டோர் போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இர்பானை போலீஸார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்