57 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்கள்: இலக்கை நெருங்க திணறும் இந்தியா!

Webdunia
வியாழன், 5 ஜனவரி 2023 (21:45 IST)
57 ரன்களுக்கு 5 விக்கெட்டுக்கள்: இலக்கை நெருங்க திணறும் இந்தியா!
இந்தியா மற்றும் இலங்கை இடையே இன்று நடைபெற்று வரும் 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 57 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது. 
 
முன்னதாக இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 207 என்ற இலக்கை நோக்கி தற்போது இந்திய அணி விளையாடி வருகிறது. 
 
இந்த நிலையில் இஷான் கிஷான், சுப்மன் கில், ராகுல் திரிபாதி, கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் தீபக் ஹூடா ஆகிய 5 விக்கெட்டுகள் சரிந்து விட்ட நிலையில் தற்போது சூர்யகுமார் யாதவ் மட்டும் போராடி வருகிறார்.
 
இன்னும் 65 பந்துகளில் 150 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை இருப்பதால் இந்தியா வெற்றி பெறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது என வர்ணனையாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்