அயோத்தியில் ராமர் கோயில் திறக்கும் தேதியை அறிவித்த அமைச்சர் அமித்ஷா!

வியாழன், 5 ஜனவரி 2023 (19:03 IST)
அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்காக  இந்தியா முழுவதிலும் இருந்து பக்தர்கள்  நன்கொடை அளித்து வருகின்றனர்.

கடந்த 2021 ஆம் ஆண்டிலேயே  ரூ.1000 கோடிக்கு மேல் நாடுமுழுவதிலும் இருந்து நன்கொடை குவிந்ததாகத் தகவல் வெளியான நிலையில், ராம ஜென்மபூமியின் பாதுகாப்பு மற்றும் ராமர் கோவில் புனிதத்தை கருத்தில் கொண்டு கோயில் கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.

ALSO READ: ராமர் கோயில் கட்டுவதற்காக ரூ.1000 கோடி நன்கொடை வசூல் !
இந்தக் கோயில் கட்டுமானப் பணிகள் முடிந்து எப்போது கோயில் திறக்கப்படும் என்ற ஆர்வம் பக்தர்களிடையே எழுந்த நிலையில், இன்று, கோயில் திறப்பது குறித்து  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

அதில், 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயில் திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பரில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் 50%  நிறைவடைந்துள்ளதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்