வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்த 124 பயணிகளுக்கு கொரொனா மற்றும் 40 புதிய வகை தொற்று!- மத்திய சுகாதார அமைச்சகம்

வியாழன், 5 ஜனவரி 2023 (15:07 IST)
கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து  இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளுக்கு கொரொனா தொற்றுப் பரவிய நிலையில், இதன் 5 ஆம் அலை விரைவில் பரலாம் என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது.

இந்த நிலையில்,  சீனாவில் தற்போது பிஎஃப்-7 என்ற கொரொனாவின் உருமாறிய ஒமைக்ரான் வைரஸ் தொற்று பரவி வருவதால் அங்கு தினமும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பிஎஃப்-7 ஒமைக்க்ரான் வைரஸ் அமெரிக்கா, ஜப்பான், உள்ளிட்ட நாடுகளுக்கும் பரவி வரும் நிலையில் வெளி நாடுகளில் இருந்து இந்தியா வந்த பயணிகளுக்கு இத்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்தியா வரும் பயணிகளுக்கு கொரொனா  நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என்று மத்திய அரசு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிட்டுள்ள நிலையில்,  கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி முதல் ஜனவரி 3 ஆம் தேதி வரை  வெளி நாடுகளில்  இருந்து இந்தியா வந்துள்ள 19,227 பயயணிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 124 பயணிகளுக்கு கொரொனா வைரஸ் பாதிப்பும்,40 பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது.

ALSO READ: சீனாவில் 90 கோடி பேருக்கு கொரொனா பரவவுள்ளது குறித்து அமெரிக்கா கருத்து!
 
இதில், 14 பேருக்கு எக்ஸ்பிபி(Xbb) வகையும், bq வகை கொரொனா 9 பேருக்கும், ba5.2 வகை கொரொனா 2 பேருக்கும், பிஎஃப்7 வகை கொரொனா ஒருவருக்கும் உள்ளதாக  மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது..

மேலும், அமெரிக்காவில் இருந்து நேற்று மேற்குவங்க மாநிலத்திற்கு வந்த நான்கு பேருக்கு BF 7 ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்