கொல்கத்தா அணியில் இருந்து காம்பீரே விலகினார்...

Webdunia
செவ்வாய், 30 ஜனவரி 2018 (20:33 IST)
கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்று தந்தார் காம்பீர். இதுவரை 131 ஆட்டங்களில், 3634 ரன்கள் குவித்து 31 முறை அரை சதம் அடித்துள்ளார் காம்பீர். மேலும், சிறந்த ஐபிஎல் கேப்டனாகவும் கருதப்படுகிறார்.
 
ஐபிஎல் 11வது சீசனுக்கான ஏலத்தின்போது, காம்பீரை கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தக்க வைக்கவில்லை. எனவே கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வருவதற்கு முன், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு அவர் விளையாடியதால், இரண்டு அணிகளில் எந்த அணி அவரை ஏலத்தில் எடுக்கும் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது. 
 
இந்நிலையில் சமீபத்தில் நடந்த ஐபிஎல் ஏலத்தின்போது, தங்களுக்கு உள்ள உரிமையின் அடிப்படையிலும் கொல்கத்தா அணி காம்பீரை ஏலத்தில் எடுக்கவில்லை. இறுதியில், டெல்லி டேர்டெவில்ஸ் ரூ.2.8 கோடிக்கு அவரை ஏலத்தில் எடுத்தது. 
 
தற்போது காம்பீரை ஏலத்தில் எடுக்காதது குறித்து கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சிஇஓ வெங்கி மைசூர் பின்வருமாறு கூறியுள்ளார். இந்த சீசனில் தன்னை ஏலம் எடுக்க வேண்டாம் என்று கம்பீர் கேட்டுக் கொண்டார். அதனால்தான் அவரை ஏலத்தில்  எடுக்கவில்லை. ஆனால், இதற்கான காரணம் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்