ஐபிஎல் வரும் ஏப்ரல் மாதம் முதல் துவங்கவுள்ள நிலையில், அணி வீரர்களுக்கான ஏலம் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஏற்கனவே, தங்களுக்கு தேவையான வீரர்களை அணிகள் வைத்துக்கொண்டனர்.
சிஎஸ்கே அணியின் ஆஸ்தான வீரர்கள் தோனி, ரெய்னா, அஸ்வின், ஜடேஜா ஆவர். இதில் தோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோரை சிஎஸ்கே அணி தக்கவைத்துக்கொண்ட நிலையில், அஸ்வின் ஏலம் மூலம் எடுக்கப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. தோனியும் அஸ்வின் நிச்சயம் அணியில் சேர்க்கப்படுவார் என நம்பிக்கை தெரிவித்தார்.