ஐபிஎல் 2018: கொல்கத்தா அணியால் தவிர்க்கப்பட்டாரா காம்பீர்...
வெள்ளி, 5 ஜனவரி 2018 (16:22 IST)
ஐபிஎல் 11வது சீசனுக்காக அணிகள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியல் நேற்று வெளியானது. இதில் கிறிஸ் கெயில் மற்றும் இந்திய வீரர் கவுதம் காம்பிர் கண்டுக்கொள்ளப்படாதது அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.
கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்று தந்தார். இது வரை 131 ஆட்டங்களில், 3634 ரன்கள் குவித்து 31 முறை அரை சதம் அடித்துள்ளார் காம்பீர். மேலும், சிறந்த ஐபிஎல் கேப்டனாக கருதப்படுகிறார் இவர்.
கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வருவதற்கு முன், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு அவர் விளையாடியதால், இரண்டு அணிகளில் எந்த அணிக்கு போக போகிறார் என்பது அடுத்து நடக்கும் ஏலத்தின்போது தெரியும்.
அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்:
சென்னை சூப்பர் கிங்ஸ்: தோனி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா
டெல்லி டேர்டெவில்ஸ்: கிறிஸ் மோரிஸ், ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர்
கிங்ஸ் லெவன் பஞ்சாப்: அக்ஸர் படேல்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சுனில் நரேன், ஆண்ரே ரசல்
மும்பை இந்தியன்ஸ்: ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, ஜஸ்பிரிட் பும்ரா
ராஜஸ்தான் ராயல்ஸ்: ஸ்டீவன் ஸ்மித்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, டிவில்லியர்ஸ், சர்ஃபரஜ் கான்
சன் ரைசஸ் ஐதராபாத்: டேவிட் வார்னர், புவனேஸ்வர் குமார்