காந்தியடிகளும் குடியரசு தினத்திற்கான விதையும்...

Webdunia
திங்கள், 22 ஜனவரி 2018 (15:52 IST)
1947 ஆகஸ்ட் 15 இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றது. ஆனால், 1930 ஜனவரி 26 ஆம் தேதி பூரண சுயராஜ்யம் கொண்டாடப்பட்டது. பூரண சுயராஜ்யம் என்பதற்கு முழுமையான சுதந்திரம் என்பது பொருள். 
 
1929 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் லாகூரில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், அனைத்துத் தலைவர்களாலும் பூரண சுயராஜ்யம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் சுதந்திர நாளாக கொண்டாடப்பட வேண்டும் காந்தி கேட்டுக்கொண்டார். 
 
அந்த காலகட்டத்தில் நாட்டில் பொருளாதார மந்த நிலை நிலவியது. வறுமை மக்களை வாட்டி எடுத்துக் கொண்டிருந்தது. சுதந்திரத்திற்காக பல வன்முரை போராட்டங்களும் நடைபெற்று வந்தது. ஆகவே, தேசிய எழுச்சியை அகிம்சை பாதையில் நடத்த முடிவெடுத்தார். 
 
அதேபோல், நாடு முழுவதும் 1930 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி அன்று அமைதியாக சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. சுதந்திர போராட்டத்திற்கான சில உறுதிமொழிகளும் அந்நாளன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. 
 
சுதந்திரம் பெறுவதற்கு 17 ஆண்டுகளுக்கு முன்பே காந்தியடிகள் ஏற்படுத்திய சுதந்திர தின நாள்தான் ஜனவரி 26. எனவே, அந்த நாளை குடியரசு தினமாக, 1949-ல் நேரு அமைச்சரவை முடிவு செய்தது. 1950 முதல் ஜனவரி 26 குடியரசு தினமாகக் கொண்டாடப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்