இந்திய சுதந்திர தினம் 1947 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தில் இருந்து சுதந்திரம் பெற்றதை நினைவுகூரும் வகையில் ஆகஸ்ட் 15 அன்று அனுசரிக்கப்படுகிறது. நாம் 70ஆம் ஆண்டு சுதந்திரம் தினத்தை இந்த ஆண்டு கொண்டாடுகிறோம். நாம் 70 ஆண்டுகளில் செல்வந்த இந்தியாவின் கலாச்சாரத்தை மற்றவர்கள் போற்றும் வகையில் முனைப்புடன் வாழ்கிறோம்.
உலக வரலாற்றில் வேறு எவரும் பயன்படுத்தாத இரண்டு ஆயுதங்களை இவர் பயன்படுத்தினார். பீரங்கிகளுக்கும், தோட்டாக்களுக்கும் பெயர்போன காலனித்துவ ஆட்சியியாளர்கள்கூட கடைசியில் தோற்றுப்போய் இவருக்குத் தலை வணங்கினர். அவர்தான் அகிம்சை, வாய்மை என்ற இரண்டு உன்னத பண்புகளை வாழ்ந்து காட்டிய இந்தியாவின் தேசப்பிதா அன்னல் காந்தியடிகள்.