நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் வீட்டில் நேற்று இரவு திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்த விசாரணை செய்தபோது, குளிர்சாதனக் கருவி பழுதால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வக்பு வாரிய திருத்த மசோதா வாக்கெடுப்பில், நாமக்கல் எம்பி மாதேஸ்வரன் பங்கேற்கவில்லை என்றும், அதனால் அவருக்கு கண்டனம் தெரிவித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா வாக்கெடுப்பின்போது, தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், அதனால் தான் தன்னால் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் மாதேஸ்வரன் எம்பி விளக்கம் அளித்துள்ளார்.