ஏப்ரல் 16 முதல் இந்தியாவில் அறிமுகமாகும் Xiaomi Qled ஸ்மார்ட் டிவி.. என்னென்ன சிறப்பம்சங்கள்?

Mahendran

வியாழன், 10 ஏப்ரல் 2025 (15:13 IST)
ஜியோமி நிறுவனம் தங்களுடைய புதிய ஸ்மார்ட் டிவி மாடலான QLED X Pro ஐ இந்தியாவில் வெளியிட்டுள்ளது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, இந்த டிவி ஏப்ரல் 16ஆம் தேதி முதல் விற்பனைக்கு வர உள்ளது.
 
இந்த புதிய டிவி மூன்று அளவுகளில் கிடைக்கிறது – 43 இன்ச், 55 இன்ச் மற்றும் 65 இன்ச். ஒவ்வொன்றிலும் தரமான காட்சி அனுபவம் மற்றும் நவீன வசதிகள் கொண்டவை. இதன் முக்கிய அம்சங்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
 
4K ரெசலூஷன் (2160 x 3840 பிக்சல்கள்) கொண்ட திரை
 
178° பார்வை பரப்பளவு – எந்த கோணத்தில் பார்த்தாலும் தெளிவான காட்சி
 
Quad-Core A5 பிராசஸர்,
 
2 ஜிபி RAM மற்றும் 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
 
MagicQ தொழில்நுட்பம் – வண்ணங்களை நிஜமாக காட்டும் திறன்
 
Dolby Vision ஆதரவு – சினிமா தர காட்சி
 
43 இன்ச் மாடலுக்கு 30W ஸ்பீக்கர்
 
55 மற்றும் 65 இன்ச் மாடல்களுக்கு 34W ஸ்பீக்கர்
 
Google Voice Assistant – குரலால் கட்டுப்படுத்தும் வசதி
 
Kids Mode – பெற்றோர் கட்டுப்பாடு வசதி
 
இணைப்புக்காக 2 USB போர்ட்கள், 3.5mm ஹெட்போன் ஜாக், மற்றும் Ethernet போர்ட் உள்ளடக்கம்.
 
விலை விவரம்:
43 இன்ச் – ₹31,999
 
55 இன்ச் – ₹44,999
 
65 இன்ச் – ₹64,999
 
இந்த டிவிகள் ஃப்ளிப்கார்ட் மற்றும் ஜியோமி அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஏப்ரல் 16 முதல் விற்பனைக்கு வரும்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்